நியூஸிலாந்தில் ஒருவருக்கு COVID ; நாடளாவிய ரீதியிலான கடுமையான முடக்கம்


 நியூஸிலாந்தில் ஒருவருக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்கு நாடு தழுவிய முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நியூஸிலாந்தில் கடந்த 8 மாதங்களுக்கு பின்னர் ஒருவருக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டதால், நாடு தழுவிய முழுமையான முடக்கத்தினை நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்தார். 

இந்த புதிய COVID தொற்றாளர் ஒக்லாந்தில் இனங்காணப்பட்டார் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஒக்லாந்தில் ஒரு வாரம் முடக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் ஏனைய அனைத்து பகுதிகளும் மூன்று நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளன.


- Kayal