காற்றும், மழையும் கவிபாடியது, அம்பாரை மாவட்டத்தில்


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)அம்பாறையில்  மழையுடன் கூடிய காற்றுடன்  காலநிலை  மாற்றம் திடிரென ஏற்பட்டமையினால்    பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.சில இடங்களில் மழை குறைந்து  காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக    பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்வதுடன் மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்துள்ளன.

இன்று (17)  திடீரென    காற்று  அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை, கல்முனை,  நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி,காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை,அக்கரைப்பற்று ,பகுதிகளில் கடும் மழையுடன் காற்று   வீசியது.இதனால் வீதியால் பயணம் செய்த பொதுமக்கள் வாகன சாரதிகள் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இதேநேரம் மழை வீழ்ச்சி இடைவிடாது பெய்து வருகின்ற நிலையில் நீர்நிலைகள் யாவும் நீரால் நிரம்பியுள்ளதுடன் சில தாழ்நில நெற் செய்கை வயல் நிலங்களும் முற்றாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது .பகல் நேரத்தில் பயணிக்கும் வாகனங்களின் முன்விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டு பயணிப்பதையும் அவதானிக்க முடிந்தது. அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருவதுடன் வீதிகள் குடியிருப்புக்கள் என பல இடங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளமையும் இந்நிலை நீடித்தால் வெள்ள அனர்த்தம் ஏற்படும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சில இடங்களில் புழுதியுடன் கூடிய காற்று வீசியதுடன் விளம்பர பலகைகளும் சேதமடைந்தன.கடற்கரையோரங்களில் உள்ள தென்னைமரங்கள் அகோர காற்றினால் ஓலைகளை இழந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.