நாளை சில பகுதிகளில் நீர்வெட்டு..!


 கம்பஹா மாவட்டத்தின் பகுதிகளில் நாளை (18) காலை 10 மணி முதல் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

அதன்பிரகாரம் வத்தளை, ஹெந்தலை, எலகந்த, அல்விஸ் டவுன், வெலிக்கடமுல்ல, கெரவலப்பிட்டி, மாபொல, ஹினுபிட்டிய, வெலிகந்த, வேவெல்துவ, பிரன்சவத்த, கிரிபத்கொடை புதிய வீதி, தலுபிட்டிய, அக்பர் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. 

வேவெல்துவ பல்கலைக்கழக வீதியில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாகவே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


- Kayal