6 பலஸ்தீன கைதிகள் சுரங்கம் மூலம் தப்பியோட்டம் தப்பிச்சென்ற கைதிகளை கண்டுபிடிப்பதற்கான பாரிய தேடுதல் நடவடிக்கைகளை இஸ்ரேலிய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

அல் அக்ஷா தியாகிக்கள் படையணியின் முன்னாள் தலைவர் ஒருவர் மற்றும் ஜிஹாத் குழு அங்கத்தவர்கள் ஐவருமே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இக்கைதிகள் சிறையிலிருந்து தப்பியதை பலஸ்தீன அமைப்புகள் வரவேற்றுள்ளன. ஆனால், இது பாரிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் தோல்வி என இஸ்ரேலிய சிறைச்சாலைகள் சேவை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.