பெண்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு உபகரணங்கள்பெண்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு உதவியாக காரைதீவில் உபகரணங்கள் வழங்கி வைப்பு !


நூருல் ஹுதா உமர்கடல்வளம் சார்ந்த வீட்டிலிருந்து செய்யும் தொழில்கள் தொடர்பாக பெண்களை வலுவூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட மகளிருக்கான சுயதொழில் ஊக்குவிப்பு உதவியாக கருவாடு பதனிடுவதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன

சிறுவர் பெண்கள் விவகார அமைச்சினால் வழங்கப்பட்ட இந்த சுயதொழில் ஊக்குவிப்பு உதவியிணை தெரிவு செய்யப்பட்ட மகளிர்களுக்கு காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் எஸ் பாத்தீபன் உட்பட காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வழங்கி வைத்தனர்.