இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசம் – ஐ.நா ஆணையாளர் அதிரடி குற்றச்சாட்டு


 


பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாக மீளாய்விற்கு உட்படுத்த வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள், காணாமல்போனோரின் குடும்பங்கள், ஊடகவியலாளர்கள், வைத்திய அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் மீதான தொடர்ச்சியான அடக்குமுறைகள் கவலையளிக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

மோசமடைந்துவரும் மனித உரிமைகள் மற்றும் சிவில் நிர்வாக சேவையில் அதிகரித்துவரும் இராணுவமயமாக்கம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் கவிஞர் அஹனாப் ஜசீம் ஆகியோர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைகளின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறித்து ஆணையாளர் மிச்சேல் பச்லெட் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.