மூத்த வழக்கறிஞர் M.Jameel அவர்கள் எமுதிய " வணிக விதானம்"



 


பல்கலைக்கழகங்களில் சட்ட பீடம் தவிர்ந்த, ஏனைய பீடங்களில் வணிகவியல் சட்டத்தை ஒருபாடமாகக் கற்கவேண்டியுள்ள உள்வாரி, வெளிவாரி மாணவர்களினதும், தொழில் நுட்பக் கல்லூரிகளில் வணிகவியல் சட்டத்தை ஒருபாடமாகக் கற்கும் மாணவர்களினதும் தேவைப்பாட்டைப் பூர்த்தி செய்யும் வகையில் சிரேஷ்ர சட்டத்தரணியும், முன்னாள் மேல்நீதிமன்ற ஆணையாளரும், தென்கிழக்குப் பல்கலைக்கழக வருகை தரு விரிவுரையாளருமான M.S


M.Jameel அவர்கள் எமுதிய " வணிக விதானம்"  நூல் வெளியீட்டுவிழா இன்று சனிக்கிழமை (06-11-2021) மருதமுனை பொதுநூலக மர்ஹூம் மருதூர் கனி ஞாபகார்த்த அரங்கில் சுகாதார வழிகாட்டுதல்களுடன், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ர சட்டத்தரணி கெளரவ A.M.Rakeeb அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி Nizaam Kaariyaper அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி கெளரவ T.L

Abdul Manaf மற்றும் தென்கிழக்குப்பல்கலைக்கழக பீடாதிபதிகள், சிரேஷ்ர விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்