வீடு தேடி வந்த கடலுக்கு வயது17.



 


சுனாமி ஆழிப் பேரலை ஏற்பட்டு இன்றுடன் 17 வருடங்களாகின்றது.

இலங்கை உள்ளிட்ட நாடுகளை சுனாமி தாக்கி, இன்றுடன் (26) 17 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

சுனாமி அனர்த்தத்தினால் உயிர்நீத்த உறவுகளின் ஆத்ம சாந்தியை வேண்டி இரண்டு நிமிட மெளன அஞ்சலியை செலுத்துமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

சுனாமி இலங்கையை காலை 9:25 க்கு தாக்கியிருந்தது.

இந்த நிலையில், 9:25 முதல் 9:27 வரையான இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலியை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது