கிளிநொச்சி பூநகாி கௌதாரிமுனை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞா் ஒருவா் உயிரிழந்துள்ளார்
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை மற்றும் குருநகர் பகுதியில் இருந்து படகு மூலம் கௌதாாிமுனை பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
சம்பவத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்குதலுக்குள்ளாகி யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியைச் சோ்ந்த 22 வயதுடைய இளைஞா் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை குருநகாில் இருந்து படகு மூலம் வருகைதந்த சுற்றுலா குழுவினர் சம்பவத்தின் பின்னர் தப்பி சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடா்பில் பூநகாி பொலிஸாா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment
Post a Comment