(எம்.ஜே.எம்.சஜீத்)
அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் கடந்த பல வருட காலமாக பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடமையாற்றிய ஜனாப் எஸ்.டி.எம்.ஹாசீம் மற்றும் சமையலாளர்களாக கடமையாற்றிய ஜனாப் ஏ.எல்.மௌசூத்தீன், ஏ.எச்.என்.ஹம்தா ஆகியோரை பாராட்டி நினைவு சின்னம் வழங்கும் நிகழ்வு இன்று (27) பதிவாளர் திரு ஏ.புஷ்பராஜ் தலைமையில் கல்லூரி ஆராதணை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரியின் பீடாதிபதி சட்டத்தரணி திருவாளர். கே. புண்ணியமூர்த்தி அவர்களும் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Post a Comment
Post a Comment