வி.சுகிர்தகுமார்
இன்று அக்கரைப்பற்றில் அமைந்துள்ள லாப்வ் காஸ் விற்பனை முகவர் நிலையத்தில் காஸ் சிலின்டர் விற்பனை இடம்பெற்ற நிலையில் அதனை பெற்றுக்கொள்ள பெருந்திரளான மக்கள் ஒன்று கூடியதுடன் அதிகமான மக்கள் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
காஸ் சிலிண்டர் பெற்றுக்கொள்ள ஒன்று கூடியவர்களை பொலிசார் வரிசைக்கிரமமாக ஒழுங்கு படுத்தி காஸ் சிலிண்டர்களை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாட்டினை மேற்கொண்டிருந்தனர்.
ஆனாலும் பின்வரிசையில் காத்திருந்த பலருக்கு கொண்டுவரப்பட்ட காஸ் சிலிண்டர்கள் முடிவடைந்த நிலையில் வழங்கப்படவில்லை.
இதனால் கவலையடைந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை காண முடிந்தது.
சில நாட்களின் பின்னர் காஸ் சிலிண்டர் விற்பனை இடம்பெற்ற நிலையில் 12.5 கிலோ சிலிண்டர் 4300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. ஆயினும் அதனையும் பெற்றுக்கொள்ள அதிகமான மக்கள் வரிசையில் இங்கு காத்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
இதேநேரம் கொண்டுவரப்பட்ட காஸ்சிலிண்டர்களின் அளவிற்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு ஏனையோரை முன்கூட்டியே திருப்பி அனுப்பி இருந்தால் நீண்ட நேரம் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என அங்கு கூடியிருந்த மக்கள் கருத்து தெரிவித்தனர்.

Post a Comment
Post a Comment