பாற்குடபவனி




வி.சுகிர்தகுமார்  


  கறை கழைந்து குறைபோக்கி நிறைவாக்கி எம்மவர்க்கு கலைவளமும், திருவருளும், எழில் வளமும் இனிதே வளங்கும் பழம்பெரும் பதியாம்  கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டம் தம்பிலுவில் முனையூர் அருள்மிகு ஸ்ரீ படபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த அலங்கார திருச்சடங்கு சக்தி விழாவின் பாற்குடபவனியும் அம்மனுக்கான பாலாபிசேகமும் இன்று (10) இடம்பெற்றது.  

தம்பிலுவில் பகுதி விஸ்வப்பிரம்ம குலத்தோர் செறிந்துவாழும் முனையூர் பதியில் அமர்ந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ படபத்திரகாளியம்மனின் சடங்கு 06 ஆம் திகதி ஆரம்பமாகியதுடன் கொடியேற்றமும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

அலங்கார திருச்சடங்கு சக்தி விழாவினை முன்னிட்டதாக பாற்குட பவனி இன்று தம்பிலுவில் வேப்பையடி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி ஆலயத்தை சென்றடைந்ததுடன் அம்மனுக்கான பாலாபிசேகமும் நடைபெற்றது. இதில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று மாலை வீரகம்பம் வெட்டுதல் 11ஆம் திகதியும் வீதி உலா 12ஆம் திகதியும் இடம்பெறவுள்ளதுடன்; 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள தீமிதிப்பு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை இடம்பெறும் பால்பொங்கல் இரவு இடம்பெறும் வைரவர் வேள்வியுடனும் கிரியைகளுடனும் நிறைவுறும்;.

ஆலய தலைவர் க.சசிகாந்தன் தலைமையில் ஆலய நிருவாகத்தின் மற்றும் குடிபூசை முகாமைக்காரர்கள் மகளிர் அமைப்பினர் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றுதலோடு இடம்பெறும் வருடாந்த அலங்கார திருச்சடங்கு சக்தி விழாவின் கிரியைகள் யாவற்றையும் பிரதிஸ்டா பிரதமகுரு தேசமான்ய அருட்கலைத்திலகம் காளிபூஜா துரந்தரர் விஸ்வபிரம்மஸ்ரீ செ.சற்குணராஜா தலைமையிலான குருமார்கள் நடாத்தி வைக்கவுள்ளனர்.