வி.சுகிர்தகுமார் 0777113659
துருக்கி மற்றும் சிரிய நாடுகளில் நில அதிர்வு காரணமாக ஏற்பட்ட பூகம்பத்தில் உயிரிழந்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டிய பிரார்த்தனை வழிபாடுகள் ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சங்கத்தினரால் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்டது.
ஆக்கரைப்பற்று ஆலையடிவேம்பு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் ஆலயத்தில் ஆலையடிவேம்பு வர்த்தகர் சங்க தலைவர் ஆர்.ஜெகநாதன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆத்மா சாந்தி வேண்டிய பிரார்த்தனை வழிபாடுகளில் வர்த்தகர் சங்க நிருவாகத்தினர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட அவர்கள் ஆலயத்தின் முன்பாக ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினர்.
உயிரிழந்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டிய பிரார்த்தனை மாத்திரமன்றி காயங்களுக்கு உள்ளானவர்கள் நலன்பெறவும் உடமைகளை பறிகொடுத்த மக்கள் மீண்டெழவும் வேண்டிக்கொண்டனர்.
இலங்கை மக்கள் சார்பில் சார்பில் தமது அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் துருக்கி மற்றும் சிரிய நாடுகள் இத்துயர சம்பவத்தில் இருந்து மீண்டு வரவும் இறைவனிடம் வேண்டுவதாகவும் வர்த்தகர் சங்க தலைவர் ஆர்.ஜெகநாதன் மற்றும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சஜீவ் சர்மா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

Post a Comment
Post a Comment