பாறுக் ஷிஹான்
159 வருட பொலிஸ் வீரர் தினம் அம்பாறை மாவட்டத்தில் இன்று (21) இடம்பெற்றதுடன் இத்தினைத்தையொட்டி பொலிஸ் திணைக்களம் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.
மௌன அஞ்சலியைத் தொடர்ந்து பொலிஸ் கொடி ஏற்றப்பட்டதுடன் பொலிஸ் நினைவுத் தூபிக்கு விசேட பொலிஸ் மரியாதை நிகழ்வுகளுடன் நினைவுத் தூபிக்கு மலர் வளையம் மற்றும் மலர் கொத்துக்கள் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் அம்பாரை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டி ஜெயந்த ரட்நாயக்க கலந்து கொண்டு பொலிஸ் கொடியை ஏற்றி அரைக்கம்பத்தில் பறக்கவிட்டார்.
தொடர்ந்து உயிரிழந்த அத்தனை பொலிஸ் உத்தியோகத்தர்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் இடம்பெற்றதுடன் அம்பாரை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் முன்னாலுள்ள பொலிஸ் வீரர்கள் நினைவுத் தூபிக்கருகில் பூச்செண்டுகள் வைக்கப்பட்டு நினைவு கூறப்பட்டது.
அவனது நண்பன் மம்மிலே மரிக்காரின் துப்பாக்கித் தாக்குதலுக்கு ஆளாகி உயிர்நீத்த முதலாவது பொலிஸ் வீரர் பொலிஸ் கான்ஸ்டபிள் சஹானின் மரணத்தை முன்னிட்டு அன்று முதல் இன்றுவரை ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 21ம் திகதி பொலிஸ் வீர ஞாபகார்த்த தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது 30 ஆண்டுகளாக நீடித்த போரின் போது 15 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 2594 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ர்.கடமையி
பொலிஸார் முன்னுதாரணமான தேசியப் பிரஜைகளாக இன மத பேதமின்றிக் கடமையாற்றி நாட்டில் சமாதான சகவாழ்வை நிலை நிறுத்துவதில் பாடுபட்டு வந்துள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது உயிர்நீத்த பொலிசாரின் உறவினர்களின் நலன்கள் ஆராயும் செயற்பாடும் அம்பாரை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்கவினால் முன்னெடுக்கப்பட்டது.
.jpeg)

Post a Comment
Post a Comment