மும்பை:
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா அகமதாபாத்தில் கடந்த 31- ந் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. 'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் , நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் , பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும்.
ஒவ்வொரு அணியும் உள்ளூர் மைதானம், வெளியூர் என 14 போட்டிகளில் விளையாட வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். இதையும் படியுங்கள்: மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு கட்டுப்பாடு- ரசிகர்கள் அதிர்ச்சி ஜ.பி.எல். கோப்பையை 4 முறை கைப்பற்றிய டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அகமதாபாத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் குஜராத் டைட்டன்சிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. சேப்பாக்கத்தில் நடந்த 2- வது போட்டியில் 12 ரன் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை வீழ்த்தியது. சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 3-வது ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சை எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது. மும்பை இந்தியன்சை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி சி.எஸ்.கே. 2-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதையும் படியுங்கள்: அகில இந்திய கல்லூரி கிரிக்கெட்: எத்திராஜ், விவேகானந்தா அணிகள் சாம்பியன் சென்னை அணியின் பேட்டிங் மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஆனால் பந்து வீச்சுதான் கவலை தரும் வகையில் இருக்கிறது. பேட்டிங்கை பொறுத்த வரை தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவா் 2 ஆட்டத்தில் அரை சதம் அடித்தார். அவர் 149 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
இதே போல கான்வே, மொய்ன் அலி, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, கேப்டன் டோனி ஆகியோரும் அதிரடியாக விளையாடக் கூடிய பேட்ஸ் மேன்கள் ஆவார்கள். பென் ஸ்டோக்ஸ் 2 ஆட்டத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தவில்லை. இதனால் நாளைய போட்டியிலாவது அவர் தனது திறமையை வெளிப்படுத்துவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையும் படியுங்கள்: சென்னையில் சிஎஸ்கே- ராஜஸ்தான் மோதல்: டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு சி.எஸ்.கே. அணியின் வேகப்பந்து வீச்சு மிகவும மோசமாக இருக்கிறது. கடைசி கட்டத்தில் அவர்களால் நேர்த்தியாக வீசமுடியவில்லை. நோபால், வைடுகளை அதிகமாக வீசுகிறார்கள். இதில் இருந்து அவர்கள் நல்ல நிலைக்கு திரும்புவது அவசியமாகும். முன்னணி வேகப்பந்து வீரரான தீபக் சாஹரும் கடந்த ஆட்டத்தில் சொதப்பினார். இதனால் அவர் நேர்த்தியாக பந்து வீச வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என்று தெரிகிறது. மும்பை இந்தியன்சை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது சென்னை அணிக்கு சவாலானது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணி சி.எஸ்.கே.வை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவது மும்பை அணிக்கு கூடுதல் பலமாகும். திலக் வர்மா மட்டுமே கடந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் சாதித்தார். கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். அவர்கள் நல்ல நிலைக்கு திரும்பி அதிரடியை வெளிப்படுத்துவார்கள் என்று மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.


Post a Comment
Post a Comment