நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு இரண்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது.
இதன் கீழ் அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் அரச சேவையில் இல்லாத பட்டதாரிகள் என இரு தரப்பினரும் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10.02.2023 அன்றைய திகதியில் அரச சேவையில் நியமனம் பெற்று, தற்போது சேவையில் உள்ள உத்தியோகத்தர்களாக இருத்தல் வேண்டும்.
10.02.2023 அன்று 45 வயதிற்கு மிகாதவராகவும், அன்றைய திகதியில் பட்டப்படிப்பு தகுதிகளை பூர்த்தி செய்தவராகவும் இருத்தல் வேண்டும்.
இந்த ஆட்சேர்ப்பு தொடர்பாக ஏதேனும் வினவல்கள் இருப்பின், வேலை நாட்களில் முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.ஜே.எஸ்.எஸ். ஏதிரிசூரிய தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தமிழ் மொழி மூலமான தகவல்களை அறிய 0112-785634 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment