நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங்  அமைப்பின் 21 வது பகுதியளவான வீட்டுக்கான நிர்மாண வேலைகள் ஆரம்பம் ...!!





 நூருல் ஹுதா உமர்


அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பினால் "வாழ்வில் வசந்தம்" வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் 21 வது பகுதி அளவான வீட்டுக்கு நிர்மாண வேலைகள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு 2026.02.15 இடம்பெற்றது

நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நிந்தவூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அல்ஹாஜ் ஏ எம் ஜவ்பர், சங்கைக்குரிய மௌலவி அஷ் ஷெய்க் ஏ எம் இப்ராஹிம், நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் ஏ புஹாது உட்பட  பலரும் கலந்து கொண்டனர்

நிந்தவூர் - 1 ம் பிரிவில் விசேட தேவை உடைய குடும்பம் ஒன்றுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்குடன் நிந்தவூரை சேர்ந்த கல்விமான் மர்ஹும் சீ ஓ லெஸ்தகீர் அவர்களின் புதல்வரும்,  இலங்கை சுங்க திணைக்களத்தின் ஓய்வுநிலை பிரதிப் பணிப்பாளர்  ஓ எல் சப்ரி இஸ்மத் மற்றும் அவரது புதல்வர்களின் முழுமையான நிதிப் பங்களிப்புடன் இந்த வீடு பெஸ்ட் ஒப் யங் அமைப்பினால் நிர்மாணித்து வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

இதன் மூலம்  வாழ்வதற்கு ஓரளவேனும் வசதியான வீடின்றி கஷ்டப்பட்ட ஏழைக் குடும்பத்தின் நிரந்தர வீட்டுக்கான கனவு இந்த ரமழானில் நிறைவேற்றப்பட உள்ளது