வி.சுகிர்தகுமார்
இதன் ஓர் அங்கமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் இன்று (24)விழிப்பூட்டும் செயலமர்வு இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்திய பணிப்பாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல் ஒருங்கிணைப்பில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜின் தலைமையில் இடம்பெற்ற செயலமர்வில் கிழக்கு மாகாண சுகாதாரம் சுதேச வைத்தியம் சிறுவர் நன்நடத்தை சமூக சேவை மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி.திசாநாயக்
கிழக்கில் அதிகரித்துவரும் புற்றுநோயினை தடுப்பதற்கு மக்கள் விழிப்புடன் செயற்படவேண்டிய அவசியம் தொடர்பில் அவர் சுட்டிக்காட்டினார்.
நிகழ்வில் அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் எஸ்.கரன் மற்றும் சிறுவர் நன்நடத்தை ஆணையாளர் சுபியான் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகீலா இஸ்ஸடீன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பொதுமக்கள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
கிழக்கில் 300 ஆக பதிவு செய்யப்பட்டிருந்த புற்றுநோயாளர்கள் எண்ணிக்கை 3000 ஆயிரம் வரையில் வேகமாக அதிகரித்து வரும் நிலை தொடர்பில் இங்கு சுட்டிக்காட்டப்பட்டதுடன் இவ்வாறு அதிகரிப்பதற்கான காரணங்கள் மற்றும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் ஆலோசனை வழங்கப்பட்டது.
அத்தோடு புற்று நோய் தொடர்பான விளக்கத்தினை கல்முனை பிராந்திய தொற்றாநோய் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் பௌசாட் வளவாளராக கலந்து கொண்டு விரிவுரை மூலம் தெளிவூட்டினார்.


Post a Comment
Post a Comment