ஆலையடிவேம்பு நிருபர்
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் 11 வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (04) இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஆர்.ரதீசன் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர் ரதீஸ் உள்ளிட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் 10 இலட்சம் ஒதுக்கீட்டுடன் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதேநேரம் இங்கு கருத்து வெளியிட்ட மக்கள் இவ்வீட்டுத்திட்டத்தினை வழங்கிய அரசுக்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நன்றி கூறுவதாக தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment