நாடாளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு அவர்கள், பிரித்தானியாவிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மற்றும் தூதரக அதிகாரிகளை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது,பிரித்தானியாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் தூதரக ரீதியாக எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுத்தர முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.
மேலும், பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தங்களது முதலீடுகளை மேற்கொள்வதற்குத் தேவையான சாதகமான சூழலை உருவாக்குமாறும், அதற்குரிய முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் அவர் இதன்போது வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதையும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதையும் நோக்காகக் கொண்டே இந்த முக்கிய சந்திப்பு லண்டனில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#தோழர்பிரபு #கந்தசாமிபிரபு #batticaloajvp #nppsocialnetwork #batticaloanpp #NPPsupport #தேசியமக்கள்சக்தி #nppsrilanka #NPPGovernment #dccbatticaloa #JVP #sunilhandunneththi #DCCChairman #Batticaloa #CleanSriLanka
#AKD #ANURAKUMARADISSANAYAKE #PresidentAKD# #foryoupageシ #Batticaloa


Post a Comment
Post a Comment