கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தவிசாளர் நியமனம்



 


பாறுக் ஷிஹான்

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தவிசாளராக (ஊhயசைஅயn) காத்தான்குடியைச் சேர்ந்த எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி நியமிக்கப்பட்டுள்ளார்.


ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்று (20) உத்தியோகபூர்வமாக இந்நியமனம்  வழங்கப்பட்டது.

திருகோணமலையில் அமைந்துள்ள தலைமையகத்தில் புதிய தவிசாளர் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.

 பதவியேற்பைத் தொடர்ந்து மாகாணத்தின் போக்குவரத்து நிலவரங்கள் குறித்து அதிகாரிகளுடன் முதற்கட்ட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.


மேலும் கிழக்கு மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து சேவைகளை மேலும் வினைத்திறனானதாகவும்இ மக்களுக்கு அசௌகரியங்களற்ற பாதுகாப்புமிக்க சேவையாகவும் மேம்படுத்துவதற்குத் தேவையான புதிய திட்டங்களை அர்ப்பணிப்புடன் நடைமுறைப்படுத்துவேன். என எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி குறிப்பிட்டார்.


இவர் தேசிய மக்கள் சக்தி  அரசாங்கத்தின் காத்தான்குடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளராகச் செயல்பட்டு வருகிறார்.சுற்றாடல் அமைச்சின் மாவட்ட இணைப்பாளராகவும்இ மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தின் அபிவிருத்தி மற்றும் நலன்புரி திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் முதன்மைப் பங்காற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.