பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் விசேட வைத்தியர் ஒருவர் திடீரெனக் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (23) காலை வழக்கம் போல் கடமையில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே அவர் காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன வைத்தியரின் கார், மீகஹகிவுல பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) கேமராவில் மஹியங்கனை திசையை நோக்கிப் பயணிப்பது பதிவாகியுள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட தீவிர தேடுதலின் பலனாக, பதுளை - மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டை, மாப்பாக்கடவெவ பகுதியில் நேற்று இரவு வைத்தியரின் கார் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
காரைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, காணாமல் போன வைத்தியரைக் கண்டுபிடிப்பதற்காக இன்றைய தினம் அப்பகுதியில் சிறப்புத் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது. பொலிஸார், குற்றப் புலனாய்வுத் தடயவியல் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்தப் பகுதிகளை முழுமையாகச் சோதனையிட்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment