தேனீ வளர்ப்பு தொடர்பான செயன்முறை பயிற்சியுடன் கூடிய விழிப்புணர்வு



 


சம்மாந்துறை விவசாய போதனாசிரியர் பிரிவில் ( மாகாண)தேனீ வளர்ப்பு தொடர்பான செயன்முறை பயிற்சியுடன் கூடிய விழிப்புணர்வு கருத்தரங்கு சம்மாந்துறையில் நடைபெற்றது.


அம்பாரை மாவட்ட மாகாண விவசாய திணைக்களத்தின் பிரதி விவசாய பணிப்பாளர் பி.திஸ்ஸநாயக்க மற்றும் சம்மாந்துறை வலய உதவி விவசாய பணிப்பாளர் எஸ்.பரமேஸ்வரனின் வழிகாட்டலில் சம்மாந்துறை - மேற்கு விவசாய போதனாசிரியர் எம்எச்.முர்ஷிதா ஷிரீன் தலைமையில் விவசாய தொழில்நுட்ப உதவியாளர் ஆர்.ரஜிரேகா  ஏற்பாட்டில் மாகாண விவசாய விரிவாக்க நிலையம்,
சம்மாந்துறை.
( சம்மாந்துறை,தொழில்நுட்ப கல்லூரிக்கு முன்னால் உள்ள ஓய்வூதிய நலன்புரி சமூக சேவை சபைக் கட்டிடம்)
 இடம்பெற்றது.

தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம், நன்மைகள்,தேனீ பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகள்,தேனீ பெட்டியின் பாகங்கள் மற்றும் அதன் பயன்கள்,பாதுகாப்பு முறைமைகள், தேன்  அறுவடை, தேன் பிரித்தெடுப்பு மற்றும் களஞ்சியப்படுத்தல் என அனைத்து விடயங்களும் செயன்முறை உடன் விபராமாக தெளிவூட்டப்பட்டது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை - மேற்கு விவசாய போதனாசிரியர் முர்ஷிதா ஷீரீன்,சம்மாந்துறை - கிழக்கு விவசாய போதனாசிரியர் பி. ராஜகருணா, தொழில்நுட்ப உதவியாளர் ஆர்.ரஜிரேகா மற்றும் சம்மாந்துறையைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகளும் கலர்ந்து கொண்டனர்.