ஆலையடிவேம்பு நிருபர்
உல்லாசப்பயணிகள் பயணித்த கார் ஒன்று ஆட்டோ வாகனத்துடன் மோதியதில் ஆட்டோ வாகனம் தூக்கி வீசப்பட்ட நிலையில் சாரதி பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ஆட்டோ வாகனம் பலத்த சேதத்துக்குள்ளானது.
அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியின் அக்கரைப்பற்று 241ஆம் இராணுவ படைப்பிரிவின் முகாம் முன்பாக இன்று நண்பகல் (07) இடம்பெற்ற இவ்விபத்தில் உல்லாசப்பயணிகள் பயணித்த காரின் முன்பகுதியும் சிறு சேதத்துக்குள்ளாகியது.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து பொத்துவில் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த ஆட்டோ வாகனம் அக்கரைப்பற்று இராணுவ முகாம் முன்பாக வலது பக்கம் உள்ள பாதையின்; ஊடாக செல்ல எத்தணிக்கையில் பின்னால் வந்த உல்லாசப்பயணிகள் பயணித்த கார் முன்செல்ல எத்தணித்த போது மோதுண்டுள்ளது.
காரினால் மோதுண்ட ஆட்டோ வாகனம் சுமார் 30 மீற்றருக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டுள்ளது. இதில் ஆட்டோ பலத்த சேதத்துக்குள்ளான நிலையில் அதிஷ்ட வசமாக சாரதி உயிர் தப்பியுள்ளார்.
ஆயினும் அவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
உல்லாசப்பயணிகள் பயணித்த காரின் சாரதியிடமும் அக்கரைப்பற்று பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் உல்லாசப்பயணிகள் வேறு ஒரு வாகனத்தில் மூலமாக அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.


Post a Comment
Post a Comment