இங்கிலாந்து மண்ணில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பாகிஸ்தான் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனையை அலி உஸ்மான் படைத்துள்ளார்.
இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லியில் நடைபெற்று வருகின்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 171 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
பதிலுக்கு முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 366 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இதில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் அலி உஸ்மான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் முதல் முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment