கால்நடை வைத்தியர்களும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் பிராந்திய அதிகாரிகளும் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் பணியாற்றி வருவதாகத் தெரிவித்த சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி, அவர்களது பணிகளின்போது எவரேனும் தவறிழைத்திருந்தால், சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் அதற்கான பொறுப்பைத் தாம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (20) உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
கால்நடை வைத்தியர்களும் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளும் மிகவும் சிரமமான பணிச்சூழலில் தமது கடமைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் சென்று அவர்கள் பணியாற்ற வேண்டியுள்ளது.
இத்தகைய கடினமான சூழ்நிலைகளில் சேவையாற்றும் அதிகாரிகளை ஊக்குவிப்பதும், அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதும் மிகவும் அவசியமாகும்.
இந்த நடவடிக்கைகளின்போது எவரேனும் தவறிழைத்திருந்தால், சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தாம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்தார்.
.bmp)

Post a Comment
Post a Comment