போர்ட் சிட்டி திட்டத்துக்கு பச்சைக் கொடி



இடைநிறுத்தப்பட கொழும்பு துறைமுக நகர திட்டமான போர்ட் சிட்டி திட்டத்துக்கு அரசு அனுமதி வழகியுள்ளதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளதாக சீன ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க டொலர் 1.4 பில்லியன் பெறுமதியான குறித்த திட்டம் 2013 ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும் சீன தனியார் நிருவனமொன்றுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.
கொழும்பு தெற்காசியாவின் நிதி கேந்திர நிலையமாக மாறுவதற்கு ஏற்றதாக உள்ளது என தாம் உணர்வதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு சீன டெய்லி நாளிதழுக்கு வழகிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தியா, மியன்மார், வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் சிகப்பூர் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் வியாபர இணைப்புக்களை ஏற்படுத்திக்கொள்ள போர்ட் சிட்டி திட்டம் அமைய்யவுள்ள இடம் உதவியளிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“குறித்த திட்டமானது தொழில் வைப்புக்களை ஏற்படுத்தும். வரி வருமானத்தை ஏற்படுத்துவதுடன் ஏனைய சேவைகளுக்கான மறைமுக சந்தர்ப்பகளையும் ஏற்படுத்தும். இதனால் அனைவரும் நன்மையடைவர்.”, என சீனாவுக்கான இலங்கை தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு சீன டெய்லி நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளார். (நு)