ரணில் – மஹிந்த சிநேகபூர்வ சந்திப்பு



ஒரே நாட்டில் வாழும் மஹிந்த ராஜபக்ஷவும் ரணில் விக்கிரமசிங்கவும் எதிரிகளல்லர் என உயர் கல்வி அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (17) காலை மல்வத்து அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். இதன்போது, உயர் கல்வி அமைச்சரும் கலந்துகொண்டார். இதன்பின்னர், ஊடகவியலாளர்களுக்கு அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கடந்த வாரம் நடைபெற்ற சந்திப்பு குறித்து அமைச்சரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.