மட்டக்களப்பு – வாழைச்சேனை இந்து கல்லூரியில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரி மாணவர்களும் பெற்றோர்களும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் நேற்று (13) ஈடுபட்டிருந்தனர்.
பாடசாலைக்குச் செல்லும் பிரதான வீதியை மறித்து இன்று காலை 8.30 மணி முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
வாழைச்சேனை இந்து கல்லூரியில் நிலவும் ஆசிரியர் பற்றாகுறையை விரைவில் நிவர்த்தி செய்ய வேண்டும் என பேராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் இந்த கவனயீரப்புப் போராட்டத்தில் கலந்து கொணடிருந்தனர்
கவனயீர்ப்புப் பேராட்டத்தின் போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்குடா கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
ஒரு வாரத்திற்குள் வாழைச்சேனை இந்து கல்லூரியில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதாகவும் அவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.


Post a Comment
Post a Comment