றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் உடல் பகுதிகள் காணாமல் போனமை தொடர்பில், முன்னாள் சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராக, பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, சட்டமா அதிபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார்.
தன்னைக் கைதுசெய்வதைத் தவிர்க்க, முன் பிணை கோரி, கொழும்பின் முன்னாள் சட்டவைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உடற்பகுதிகள் லொரியில் எடுத்துச் செல்லப்பட்டமை தொடர்பில் மனுதாரர் நேரடிப் பொறுப்புடையவர் என இதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குறிப்பிட்டுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் 9ம் திகதி அறிவிக்கவுள்ளதாக, கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.