அக்கரைப்பற்றில், கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடியவருக்கு விளக்க மறியல்




(இர்சாத்)

அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில்,வியாபார நிலையத்தில் விற்பனையாளரை கடந்த நவம்பர் மாதம்     கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடியவர், 
அடையாளப்படுத்தப்பட்டார்.

குறித்த சந்தேக நபர், கடையில் பொருட்களைக் கொள்வனவு செய்ய வந்த 40ஆம் கட்டையினைச் சேர்நத நபராகும்.கடையில் உள்ள கத்தியினை எடுத்து சரமாரியாகத் தாக்கிவிட்டு, இரத்த வெள்ளத்தில் விற்பனையாளரை, உயிர் பதைபதைக்க மாலை 4 மணிக்கு, விட்டு விட்டு தலைமறைவானார்.

பாதிக்கப்பட்டநபர், தலை, நெஞ்சு, முழங்கை வரையில் கடுங்காயங்களுகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.   நீண்ட தேடுதலின் பின்னர், சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, நேற்றைய தினம், அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில், பதில் நீதிபதி எஸ்.எல்.ஏ. றசீத் முன் அடையாள அணிவகுப்பிற்கு, உட்படுத்தப்பட்டார்.

பாதிக்கப்பட்ட நபர், சந்தேக நபரை அடையாங் காட்டினார். பின்பு குறித்த சந்தேக நபர்,  நீதிமன்ற நீதிபதி திருமதி. நளினி கத்தசாமி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார்.

சந்தேக நபர்   சடுதியான கோபத்தின் விளைவால், இத்தகைய குற்றத்தினை செய்ததினை ஏற்றுக் கொண்டதாவும், பாதிக்கப்பட்ட நபருக்கு நட்டஈடு வழங்குவதாகவும், அவரது சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளான, கே.சமீம், தமிழியனியன்ஆகியோர், பிணை விண்ணப்பம் கோரினர்.ஆனால், பாதிக்கப்பட்வரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இஸ்மாயில் உவைசுர் றஹ்மான், இதுவொரு, இது ஒரு கொலைக்கான முயற்ச்சி என்றும், மாலை வேளையில், வியாபரத் தலத்தில் கத்தியால் வெட்டி. குருதிப் பெருக்கானது, மணிக்கூட்டுக் கோபுரம் வரையில் சென்றதென்றும், சுமார் அரை மணித்தியாலங்களாக, அவர், இரத்த வெள்ளத்தில் துடிக்கொண்டிருந்தாரெனவும், சந்தேக நபர், சடுதியான கோபத்தில், செய்திருந்தால், அடுத்த வாரத்திலாவது, மன்றின் முன் ஆரஜராகியிரக்கலாம் என்பதனைத் தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபரை, எதிர்வரும் 23ந் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, நீதிபதி உத்தரவிட்டார்.