மல்லவபிட்ய பள்ளிவாசலில் பெற்றோல் குண்டுவீசிய .2 பேர் விளக்கமறியல்



குருநாகல், மல்லவபிட்ய முஸ்லிம் பள்ளிவாசலின் ​மீது, கடந்த மே மாதம் 21ஆம் திகதி அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டுவீச்சுச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இருவரும், எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனரென, குருநாகல் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
குருநாகல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும், பொது பலசேன அமைப்பின் உறுப்பினர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், மேலும் நால்வரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.