கொழும்பு- கண்டி பிரதான வீதியில் வாகன நெரிசல்



கொழும்பு- கண்டி பிரதான வீதியில் கிரிபத்கும்புர, பேராதனை பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

விபத்தொன்று காரணமாக உயர் அழுத்தம் கொண்ட மின்சார கோபுரங்கள் வீதியில் வீழ்ந்துள்ளமையே இதற்கு காரணமாகும். 

இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.