மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை



(க.கிஷாந்தன்)

தீபாவளி தினத்தினை முன்னிட்டு 17.10.2017 அன்று மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு பதிலாக இம்மாதம் 28 ம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடத்தப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்தார்.

மலையக மக்கள் மிகவும் கோலகலமாக கொண்டாடப்படும் விழா பெருநாளாக தீபாவளி பண்டிகை காணப்படுவதனால் இதற்காக மக்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது வீட்டு வேலைகளை செய்து கொள்வதற்கும் பண்டிகைகாக மக்கள் ஆயத்தமாகி வருவதனால் பொது போக்குவரத்து சன நெரிசல் ஏற்படுவதனாலும், பாடசாலை மாணவர்கள் வீடு செல்வதற்கு சிரமம் ஏற்படுவதனால் இந்த விடுமுறை வழங்க முடிவு  செய்ததாகவும் இதற்கமைய மத்திய மாகாண திணைக்கத்திற்குட்பட்ட அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.