#RizviHussain.
இறக்காமம் காபட் வீதி தொடர்பாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர் M.L. முஸ்மி அவர்கள் தனது கருத்தை இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த பல வருடங்களாக இறக்காமம் வீதி திருத்தப்படாமல் மிகவும் மோசமாகவும் குண்றும் குழியுமாக காணப்பட்டது. இவ்வீதியை காபட் வீதியாக மாற்றுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சரும்மான கெளரவ ஹக்கீம் அவர்களிடம் எடுத்துக் கூறிய போது இந் ஊர் மக்களின் நலன் கருதி காபட் வீதிக்கான பணத்தை உடனடியாக அவரது அமைச்சு நிதியிலிருந்து
ஒதிக்கீடு செய்தார்.
இவ் வீதி குறிப்பிட்ட கால எல்லைக்குள் செய்து முடிக்கப்பபட வேண்டிய நிலையில் ஒரு சில காரணங்களுக்காக தடைப்பட்டு தற்போது மிக விரைவாக வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன,
மேலும் குறித்த வீதியை விரிவுபடுத்தி சந்தியில் ஒரு சுற்று வட்டம் ( ரவுண்டபோட்) ஒன்றினை அமைக்க வீதி ஓரங்களில் இருக்கும் பொது மக்கள் தங்களது வேலிகளை உடைத்து வீதி அபிவிருத்திற்கு தங்களது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வேண்டிக் கொண்டார்.
இதேவேளை இது தொடர்பாக இறக்காமம் பிரதேச சபை செயலாளரினால் பொது மக்களுக்கு அறிவித்தல் கடிதங்களும் அனுப்பப்பட்டன அதாவது பிரதேச சபையின் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக வேலிகளும். கட்டிடங்களும் கட்டப்பட்டிருந்தால் அதை உடைக்க பிரதேச சபைக்கு அதிகாரம் உண்டு இன்னும் சில தினங்களில் குறிப்பிட்ட வேலிகள் உடைக்கப்படாவிட்டால் மேலதிக நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு இவ் வேலிகள் உடைக்கப்படும் என்பதை தெரிவித்து குறித்த காபட் வீதியை அமைக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்குங்கள் என தனது கருத்தினை தெரிவித்தார்.
அத்தோடு இதற்கு முன்னுதாரணமாக இறக்காமம் பிறப்பு இறப்பு பதிவாளர்
K.L.ஸஹீலா அவர்கள் ஊரின் நலன் கருதியும் ஊர் முன்னேற்றம் கருதியும் முதல் முதலில் தனது வேலியை உடைத்து மக்களை தெளிவடையச் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment