ஹம்பாந்தோட்டை துறைமுக வர்த்தமானி அறிவித்தல்கள் நிறைவேற்றம்



ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன - இலங்கை கூட்டு நிறுவனத்திற்கு கையளிப்பது தொடர்பான மூலோபாய அபிவிருத்தி செயற்றிட்டத்தின் 2 வர்த்தமானி அறிவித்தல்கள் அதிக வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டன. 

இதேவேளை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன. 

அதேவேளை, அடிப்படை ஒப்பந்தத்திற்கு துணை உடன்படிக்கையாக தயாரிக்கப்பட்ட பங்கு உரிமை தொடர்பான உடன்படிக்கையிலும் கைச்சாத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

துறைமுக மற்றும் கடற்றொழில் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க முன்வைத்த குறித்த யோசனைக்கு அண்மையில் அமைச்சரவையில் அனுமதி கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.