முல்லைத்தீவு :குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வாக,



முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வாக, இராணுத்தினர் அவர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர். 

விஷேடமாக முல்லைத்தீவு பிரதேசத்தில் புதிதாக குடியமர்த்தப்பட்டவர்களை இலக்காகக் கொண்டு முல்லைத்தீவு இராணுவ முகாமிற்கு முன், இக்குடிநீர் மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.டபிள்யூ.டபிள்யூ.ஏ.டீ.பீ ராஜகுருவின் வழிகாட்டலின் கீழ் இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டதோடு, பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு ஆறுதலலிப்பதாக இத்திட்டம் அமைந்துள்ளது.