அக்கரைப்பற்றில், பேண் தகு அபிவிருத்தி



#Riswan
நஞ்சற்ற உணவு வகைகள் அறுவடை நிகழ்வு.

"பேண்தகு அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின்"கீழ் மேற்கொள்ளப்பட்ட பாடசாலை ரீதியான நஞ்சற்ற விவசாய உணவு வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு அதன் அறுவடை நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (02.02.2018) அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் கனிஷ்ட கல்லூரியில் கல்லூரி அதிபர் S.றினோஸ்டீன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக்கல்விப்பணிமனையின் வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேக் A.M.றஹ்மத்துல்லாஹ் அவர்களும், மற்றும் அக்கரைப்பற்று கோட்டக் கல்வி அதிகாரி, பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி குழுவினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.