எஃப்-16 ரக விமானம் கிடங்கிற்குள் பாய்ந்து விபத்து


அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான எஃப்-16 ரக விமானம் லாஸ் ஏஞ்சலீஸிலுள்ள விமானப்படை தளத்திலிருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் அருகிலுள்ள கிடங்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானக் கிடங்கு ஒன்றின் மேற்பகுதியை உடைத்துக்கொண்டு கீழே விழுவதற்கு முன்னதாகவே அதன் விமானி தனியே வெளியேறிவிட்டார். கிடங்கிற்குள் விழுந்த விமானம் ஏற்படுத்திய தீயை அங்கிருந்த தானியங்கி தீயணைப்பு அமைப்புமுறை அணைத்துவிட்டது.தகவல் இல்லை
இந்த விபத்தில் கிடங்கிற்குள் இருந்த ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. ஆனால், விமானியின் உடல்நிலை குறித்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.


விபத்து நேர்ந்த கிடங்கில் பணிபுரியும் ஒருவர் இதுதொடர்பான புகைப்படங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.