பாபர் மசூதி இடிக்கப்பட்டது,தொடர்பான வழக்கில்இன்று தீர்ப்பு


 எல்.கே.அத்வானி (இடது) முன்னெடுத்த ராமஜென்ம பூமி இயக்கம் தேசிய அளவில் பாஜகவுக்கு அரசியல் பலன்களைத் தந்தது. அசோக் சிங்கால் மற்றும் முரளி மனோகர் ஜோஷி (வலது) ஆகியோரும் ராமஜென்ம பூமி இயக்கத்தின் முக்கிய தலைவர்களாக இருந்தனர்.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌ நகரில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, வினய் கட்யார் மற்றும் பிற இந்துத்வா தலைவர்கள் மீது இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பாபர் மசூதி 1992 டிசம்பர் 6ஆம் தேதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் தீர்ப்பு வெளியாகும் நேரத்தில் நீதிமன்றத்தில் இருக்க மாட்டார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கின் விவரம் என்ன?

அயோத்தி பாபர் மசூதியை மையமாகக் கொண்டு இரண்டு வழக்குகள் இருந்தன. ஒன்று சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான 'சிவில்' வழக்கு. இன்னொன்று மசூதியை இடிப்புக்கு காரணமானவர்கள் என்று குட்டற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீதான 'கிரிமினல்' வழக்கு.

சிவில் வழக்கில் ஏற்கனேவே இந்துக்கள் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு வந்து அங்கு ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கிரிமினல் வழக்கில் விசாரனை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.

சிபிஐ நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை, வழக்கில் தோல்வியடைந்த தரப்பு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு

1992ஆம் ஆண்டு, டிசம்பர் 6 ஆம் தேதியன்று விஸ்வ இந்து பரிஷத்தின் (வி.எச்.பி) ஆர்வலர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகளின் சில தலைவர்கள் சர்ச்சைக்குரிய இடத்தில் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். இதில் ஒன்றரை லட்சம் தொண்டர்கள் (கர சேவகர்கள்) கலந்து கொண்டனர்.

பேரணி பின்னர் வன்முறையாக மாறியது. அங்கிருந்த கும்பல் அந்த பகுதியையே தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, 16ஆம் நூற்றாண்டின் பாபர் மசூதியை இடித்தது.

ayodhya babri masjid demolition case judgement


Advertisement