செப்டம்பர் மாதம் உலகில் மிகவும் சூடான மாதம்


 நடப்பாண்டின் செப்டம்பர் மாதம் உலகில் மிகவும் சூடான மாதமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐரோப்பாவில் உள்ள பூமி கண்காணிப்பு மையம் நடத்திய ஆய்வில் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் அதிக வெப்பமாக இருந்ததாகத் தெரியவந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம் என்றும், இதனால் சைபீரிய பகுதியிலும் வெப்பநிலை உயர்ந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயும் வெப்பநிலை அதிகரிக்க முக்கியக் காரணமாக தெரியவந்துள்ளது.Advertisement