அக்கரைப்பற்று Inspiring Youths கழக சுதந்திர தின நிகழ்வு


அக்கரைப்பற்று   Inspiring Youths கழகத்தினரால்  73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நிகழ்வு..

அக்கரைப்பற்று inspiring Youths  கழத்தின் தலைவர் மௌலவி M.A.M. றுஷைத் அலி அவர்களின் தலைமையில்  73வது  சுதந்திர தின நிகழ்வு இன்று  வியாழக்கிழைமை 2021:02:04ம் திகதி காலை 10:30  மணிக்கு இடம் பெற்றது.


இந்நிகழ்வுக்கு அதிதிகளாக  அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு  SUB INSPECTOR OF POLICE OIC  A. L. M. AZEEM (CRIME BRANCH) அவர்கள் மற்றும், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி A. முபாரக் அலி, அக்கரைப்பற்று இளைஞர்  சேவை உத்தியோகத்தர் M.M. ஸமீலுல் இலாஹி , அக்கரைப்பற்று இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர்  M.M.றுக்சான், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான M.K.M.ஹனிபா மற்றும் M.I.றுமைஸா ,மற்றும் நகர் பிரிவு03 கிராம உத்தியோகத்தர் S.D.M.ரிஜான் அவர்கள்  மற்றும்  inspiring Youths  அமைப்பின் ஆலோசகர்களான   N.M.அனஸ்,மற்றும் M. H.பிர்னாஸ் , ஆகியோரும்  மற்றும் அமைப்பின்  அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.


இந்நிகழ்வின் போது தேசிய கொடி மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் கொடி மற்றும் Inspiring Youths இளைஞர் கழகம் ஆகியவற்றின்  கொடிகள் ஏற்றப்பட்டு சமாதான வெண் புறா ஒன்றும் பறக்கவிடப்பட்டது.. 


இதனை தொடர்ந்து முக்கிர நிகழ்சிகளாக போதை ஒழிப்பு நிகழ்வும்,மற்றும்  வறுமைக்குட்பட்ட குடும்பங்களுக்கான பண உதவிகளும்  மற்றும் Inspiring Youths அமைப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு, மற்றும் மர நடுகை நிகழ்வும் இடம் பெற்றது.Advertisement