(சியாத்.எம்.இஸ்மாயில்)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடந்த பல வருடங்களாக விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் (Accident & Emergency Unit ) கடமையாற்றும் டாக்டர். பர்ஸானா நௌஷாட் அவர்கள் மருத்துவ நிர்வாகத்துறை தெரிவு பரீட்சையில் (Selection Examination of MSc Administration) சித்தியடைந்து மேற்படிப்புக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
களனி பல்கலைக்கழக மருத்துவ பட்டதாரியான இவர், அக்கரைப்பற்று ஆயிஷா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவரும், அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஒய்வுபெற்ற ஆசிரியை முகம்மது பழில் உம்முஹபீபா மற்றும் மர்ஹும் அபூபக்கர்லெவ்வை சீனி முகம்மது தம்பதியரின் புதல்வியுமாவார்.
இலங்கை தேசிய வைத்தியசாலையில் நரம்பியல் மற்றும் இருதய பிரிவில் கடமையாற்றியுள்ளதுடன் மருத்துவ நிர்வாகத்துறைக்கு தெரிவுபட்டவர்களுள் ஒரே ஒரு முஸ்லிம் பெண்மணி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment