இந்தோனேஷியாவில் பேருந்து விபத்து - 16 பேர் உயிரிழப்பு



 


இந்தோனேஷியாவில் பேருந்தொன்றும் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லொறியொன்றும் மோதி தீப்பிடித்ததில் 16 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.


சுமத்ரா மாகாணத்தில் உள்ள லுபுக்லிங்காவ் நகரிலிருந்து ஜாம்பி நோக்கி 20 பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்தில் திடீரென டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்துஎதிரில் வந்த லொறி மீது மோதியுள்ளது. 


மோதிய வேகத்தில் லொறியில் இருந்த டீசல் கொட்டியதில் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளன.


பேருந்துக்குள் இருந்தவர்களால் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.