ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ(57), பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, அவரது சடலம் குறித்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தற்கொலையாக இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அவரது மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
பெர்னாண்டோ, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (UPFA) சார்பில் தேர்தலில் போட்டியிட்டு, 2014ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயராக தெரிவுசெய்யப்பட்டார்.
2018ஆம் ஆண்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவுடன் மீண்டும் ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயராக தெரிவுசெய்யப்பட்டார்.


Post a Comment
Post a Comment